பொதுமக்கள் மீது ஏறிய பஸ்.. திக் திக் வீடியோ காட்சிகள்!

23905பார்த்தது
கோவை மாவட்டம் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நேற்று(மே 6) நடந்த விபத்துக் காட்சிகள் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக பயணிகள் காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது முன்னால் நின்றுகொண்டிருந்த அரசு பேருந்து மேல் மோதாமல் இருக்க பேருந்தை திருப்பிய நிலையில், அது அங்கு நின்றிருந்த பயணிகளை இடித்துதள்ளிச் சென்றது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.