பேராவூரணி டாக்டர் ஜே. ஸி. குமரப்பா பள்ளி சார்பில், நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா, சொர்ணக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, குமரப்பா கல்விக்குழும, அகாடமிக் டைரக்டர் பொறியாளர் எஸ். அஸ்வின் கணபதி தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் ஆர். விஜய பாஸ்கரன் முன்னிலை வகித்தார். குமரப்பா பள்ளி நிர்வாக அலுவலர் ஆர். சுரேஷ் வரவேற்றார்.
முகாமையொட்டி, கோவில் வளாகம் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. தொடர்ந்து அரசுப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் கிராம கமிட்டி நிர்வாகிகள், பொதுமக்கள், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஜெய வீரன், ஆசிரியர் மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஆசிரியர் எஸ். விஜய் நன்றி கூறினார்.
இதேபோல் பட்டுக்கோட்டை அருகே உள்ள தாமரங்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் அ. கி. அழகேசன் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் ஜெ. அருண் தேவி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் கே. கே. கனகசபை முகாமை துவக்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள்
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியைகள் வாழ்த்தி பேசினர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் நன்றி கூறினார்.