பாலைவனநாதர் கோவிலில் சித்திரை பௌர்ணமி விழா கொடியேற்றம்

69பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவிலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரை மாத பௌர்ணமி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோவிலில் பல்வேறு காரணங்களால் சித்திரை மாத பௌர்ணமி விழா பல ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டு விழா கொடியேற்றம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் விக்னேஷ், தக்கார் லட்சுமி, இறை பணி மன்ற தலைவர் குமார், கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள், பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பானுமதி துரைக்கண்ணு, பேரூராட்சி கவுன்சிலர் புஷ்பா சக்திவேல்,   கோவில் எழுத்தர் சங்கரமூர்த்தி , சிவப்பேரவை நிர்வாகிகள், கிராமவாசிகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் 25ஆம் தேதி வரை சுவாமி அம்மனுடன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடக்கிறது. ஏப்ரல் 22ஆம் தேதி தேரோட்டம் ஏப்ரல் 23ஆம் தேதி தீர்த்தவாரி ஏப்ரல் 25ஆம் தேதி புஷ்ப பல்லக்கு வீதி உலா நடைபெறுகிறது.
 இதற்கான விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் கிராமவாசிகள் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி