தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜத்திடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, டெல்டா பாசனத்திற்கு முறை வைத்து தண்ணீர் திறக்கும் முடிவால் சாகுபடி பணிகள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, முறை வைக்காமல் தண்ணீர் திறந்திட வேண்டும் கல்லணை கோட்டத்திற்கு நிரந்தர நிர்வாகப் பொறியாளரை நியமனம் செய்திட வேண்டும்.
திருச்சிராப்பள்ளி நாகப்பட்டிணம் வேளாண் பெருந்தட தொழிற்திட்டம் குறித்து அரசு தெளிவு படுத்திட வேண்டும். சிப்காட் தொழிற்பூங்காவில் நிறுவப்படவுள்ள தொழில்களை தெரிவித்திட வேண்டும். பயிர்க் காப்பீடு இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டு உடன் வழங்கிட வேண்டும்.
ஆரூரான் சர்க்கரை ஆலை, அம்பிகா சர்க்கரை ஆலை (HNT) கடன் வசூலில் வங்கிகள் தீவிரம் காட்டுகிறது. விவசாயிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் அனுப்புவதை உடன் நிறுத்திட வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து தென்னை மரங்களையும் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்த்திட வேண்டும்" இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.