'தங்கலான்' மேக்கிங் வீடியோ - விக்ரம் மிரட்டல்..!

8602பார்த்தது
விக்ரம் நடித்துவரும் படம் 'தங்கலான்'. பா. ரஞ்சித் இயக்கும் இப்படம் கோலார் தங்க சுரங்கத்தை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் இன்று விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழு தங்கலான் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. இதில் விக்ரம் மாறுபட்ட தோற்றத்தில் இருக்கிறார். இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தங்கலான் படப்பிடிப்பு 80 சதவீத முடிவடைந்துவிட்ட நிலையில், விரைவில் ஷூட்டிங் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.