தென்காசி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப் பட்டது.
இந்துக்கள் ஆண்டுதோறும் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கிய பண்டிகையாக தீபாவளி உள்ளது. உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு துணிக்கடைகள், நகைக் கடைகள், பட்டாசு கடைகள், பலகாரக் கடைகள் உள்ளிட்ட கடைகளில் நேற்று முன் தினம் நள்ளிரவு வரை பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. புதிதாக ஆங்காங்கே தோன்றிய நடைபாதை கடைகளிலும் பொதுமக்கள் கூட்டத்திற்கு குறைவில்லை.
தீபாவளி பண்டிகை யானை நேற்று காலையில் கோவில்களுக்குச் சென்ற பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். வீடுகளிலும் சிறப்பு வழிபாடு நடத்தி புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
மேலும் பெரும்பான்மை யானவர்கள் அசைவ உணவு சமைத்து உண்டு மகிழ்ந்தனர். நேற்று அதிகாலையில் இருந்தே இறைச்சி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
காலை மற்றும் இரவு நேரங்களில் சிறுவர் முதல் பெரியவர் வரை பட்டாசு வெடித்து தீபாவளியை கோலாகலமாக கொண்டாடினர்.
மேலும் பொதுமக்கள்
தங்கள் வீடுகளில் இனிப்பு கார வகைகள் செய்து உண்டு மகிழ்ந்தனர்.