தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நேற்று மீலாது விழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு பலா என்னும் நேரிச்சை சோறு வழங்கி கொண்டாடினர்.
கடையநல்லூர் இஸ்லாமியர் கள் அதிக அளவு வசிக்கும் பகுதியாகும் இங்குள்ள பேட்டை, ரஹ்மானியாபுரம் பெரிய தெரு , புது தெரு , மக்கா நகர், மதினா நகர், அய்யாபுரம் தெரு, மாவடிக்கால் ஆகிய பகுதிகளில் பலா எண்ணும் நேர்ச்சை சோறு பொது மக்களுக்கு வழங்கி கொண்டாடப்பட்டது.
இறை தீர்க்கதரிசிகளின் ஒருவரான முகமது நபி இஸ்லாமிய மாதங்களில் ரபியுல் அவ்வல் மாதம் 12ஆம் நாள் சவுதி அரேபியா மக்கா நகரில் பிறந்தார். அவருடைய பிறந்த நாளை இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மீலாது விழா என்ற பெயரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
12 நாட்களில் மாலை நேரத்தில் முகமது நபியின் பெயரில் புகழ் பாடும் மௌலீது பாடலை பாடுவார்கள். பேட்டை பகுதியில் காதர் மைதீன் ஜும்மா பள்ளிவாசலின் தலைவர் இப்ராஹிம் அனைவருக்கும் நேரிச்சை பலாச்சோற்றை வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் ஜமாத் தலைவர் ஆர்.எஃப்.சி சாகுல் ஹமீது , வட்டார நாட்டாமை அமுதம் இஸ்மாயில், அப்துல் ஜப்பார் புதுத்தெரு பகுதியில் காஜாமைதீன் , மசூது, அபூபக்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.