மோட்டார் சைக்கிள் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி

80பார்த்தது
மோட்டார் சைக்கிள் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே ஊர்மேல்அழகியான் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (74) இவர் அரசு மருத்துவக் கல்லூரி பணியாற்றி ஓய்வு பெற்றவர் தனது புதிய மோட்டார் சைக்கிளுக்கு நம்பர் வாங்குவதற்காக ஆர்டிஓ அலுவலகத்திற்கு ஓட்டி சென்றார்.

அப்போது எதிரே வந்த லோடு ஆட்டோவை கண்டு தடுமாறி கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்த இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி