ரோட் ஷோவில் மாணவர்கள்.. விசாரணை நிறைவு

83பார்த்தது
ரோட் ஷோவில் மாணவர்கள்.. விசாரணை நிறைவு
கோவையில் நேற்று நடைபெற்ற பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் அழகுவடிவிடம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நடத்திய 3 மணி நேர விசாரணை நிறைவு. அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்கள் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க கூடாது என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ள நிலையில், மோடி ரோட் ஷோவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற காட்சிகள் வெளியானதை அடுத்து கோவை தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி