தெரு நாய்கள் வெறிச்செயல்: பரிதாபமாக இறந்த ஆடுகள்

550பார்த்தது
தெரு நாய்கள் வெறிச்செயல்: பரிதாபமாக இறந்த ஆடுகள்
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பாலகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்லப்பன்(50). தனது தோட்டத்தில் 40 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று(மே 23) ஆடுகளை அடைத்து விட்டு வீடு திரும்பியுள்ளார். காலை எழுந்து வந்து பார்த்தபோது 9 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் பலியாகி கிடந்ததும், ஆறு ஆடுகள் படுகாயத்துடன் இருப்பதும் தெரியவந்தது. உடனடியாக கால்நடைதுறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், மருத்துவர் தேவேந்திரன் நேரில் வந்து பார்வையிட்டார். ஆடுகள் அனைத்தும் தெரு நாய் கடிக்கு ஆளாகி இறந்திருப்பது தெரிய வந்தது.