மாநிலக் கல்வி கொள்கை: முதல்வர் அலுவலகம் வெளியிட்ட பதிவு

65பார்த்தது
மாநிலக் கல்வி கொள்கை: முதல்வர் அலுவலகம் வெளியிட்ட பதிவு
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தமிழகத்திற்கான மாநில கல்விக் கொள்கை அறிக்கை இன்று (ஜூலை 1) சமர்ப்பிக்கப்பட்டது. இது குறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “மாநிலக் கல்வி கொள்கை தயாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. த.முருகேசன் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையினை மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்
அவர்களிடம் சமர்ப்பித்தது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி