ஏடிஎம்-ல் கிழிந்த நோட்டு வந்தால் என்ன செய்வது?

82பார்த்தது
ஏடிஎம்-ல் கிழிந்த நோட்டு வந்தால் என்ன செய்வது?
ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது எதிர்பாராத விதமாக கிழிந்த நோட்டுகள் வருகிறது. இதனால், பலரும் வேதனையடைகின்றனர். ஆனால், 2017ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையின்படி அந்த நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம். அந்த நோட்டுகளை வங்கிகள் நிராகரிக்க முடியாது என கூறப்படுகிறது. ஏடிஏம்-ல் பணம் எடுத்த நேரம், ஏடிஎம் பெயர் உள்ளிட்டவற்றை குறிப்பிட வேண்டும். ஏடிஎம்மில் இருந்து பெறப்பட்ட சீட்டின் நகலையும் வங்கியில் சமர்பிர்க்க வேண்டும். இது போன்று ஒரு நபர் அதிகபட்சமாக ரூ.5000 வரையும், 20 நோட்டுகள் வரையும் மாற்றிக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி