சிவகங்கைபேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மஹாலில் 71 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமை வகித்தார்.
விழாவில் பங்கேற்ற பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன்
கூட்டுறவு துறையின் செயல்பாடுகள் குறித்தும்
கிராம மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு சேர்க்கும் துறையாக கூட்டுறவு துறை இருக்கிறது என்றும், திமுக அரசு பனிரெண்டாயிரம் கோடி ரூபாய் விவசாயகடனாக மக்களுக்கு கூட்டுறவு துறையின் மூலம் கொடுத்துள்ளதாகவும், 2024 - 2025 ஆண்டிற்கான பயிர் கடன் 16 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இந்த துறைகீழ் பயிர் கடன் கால்நடைகடன் , மகளிர்சுய உதவி , ஆதரவற்ற பெண்களுக்கு கடன் , பண்ணை அமைக்க கடன், நகைக்கடன், மகளிர் தொழில் முனைவோர்கடன், சம்பள கடன் என 33 பிரிவினருக்கு கூட்டுறவுத் துறையின் மூலம் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை தெரிவித்த அவர் அகில இந்திய அளவில் நமது மாநில கூட்டுறவு துறை 3 ம் இடத்தை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
கூட்டுறவுத் துறையின் சேவையில்
கடந்த 86000 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்றதை அடுத்துநடப்பு ஆண்டில்
1 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்ற வேண்டும் என முனைப்புடன் செயல் படுகிறதுஎன தெரிவித்தார்.