சிவகங்கை மாவட்டம் குயவநடப்பு கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தர்ம விநாயகர் திருக்கோவில் ஐப்பசி மாத அன்னாபிஷேக திருநாள் முன்னிட்டு ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இக்கோவிலில் தனி சன்னதி கொண்டு ஸ்ரீ சோமசுந்தரி அம்பாளுடன் ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரர் அருள் பாலித்து வருகிறார் அன்னாபிஷேக திருநாளில் சுவாமிக்கு பல்வேறு நறுமணத் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன தொடர்ந்து அன்னம் மற்றும் காய்கறிகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்து உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்யப்பட்டன நிறைவாக பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது பின்னர் அன்னம் அலங்காரம் கலையப்பட்டு வண்ண மலர்மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது தொடர்ந்து ஏக முக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி அம்பாளை வழிபட்டனர் பக்தர்களுக்கு காய்கறிகள் பிரசாதம் வழங்கப்பட்டது.