சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட ராம் நகரில் 900 குடியிருப்புகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டுவரும் கழிவுகளால்
அப்பகுதியில் துர் நாற்றம் வீசுவதுடன் ஈக்கள் மொய்ப்பதால் குழந்தைகளுக்கு நோய் பரவி வருகிறது. இந்த நிலையில் மின் மயானம் புதியதாக கட்டி முடிக்கப்பட்டு திறக்க உள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் இது குறித்து நேரில் அதிகாரிகளிடம் மனு அளித்தும் வட்டாச்சியர் தலைமையிலான அமைதி பேச்சு வார்த்தை மின் மயானம் அமையாது என்ற வாக்குறுதியை புறம் தள்ளிவிட்டு மின் மயானத்தை பயன் பாட்டிற்கு கொண்டுவந்தால் அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் பல்வேறு துயரங்களுக்கு
அவதிப்படும் நிலை ஏற்படும் ஆகவே மாவட்ட நிர்வாகம் மின் மயானத்தை புற நகர் பகுதிக்கு மாற்ற வேண்டுமெனஇன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.