பா. ஜ. கவினர் எஸ். பி அலுவலகத்தில் புகார் மனு

66பார்த்தது
சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் சுவாமி ஐயப்பன் குறித்து தவறாக சித்தரித்து பாடல் பாடிய இசைவாணி, முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா விற்கு கொலை மிரட்டல் விடுத்த யாகூப்பை கைது செய்ய கோரியும் பா. ஜ. கவினர் எஸ். பி அலுவலகத்தில் ஐயப்பன் புகைப்படத்துடன் வந்து புகார் மனு அளித்தனர்.
அன்மையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாடல் பாடிய நீலம் இசைக்குழுவை சேர்ந்த இசைவாணி என்கிற பெண் பாடகர் சபரிமலை ஐயப்பன் குறித்து தவறாக சித்தரித்து பாடல் ஒன்றை பாடினார். இது ஐயப்ப பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதேபோல் அதே சென்னையில் நடந்த மற்றோரு நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த யாக்கூப் என்பவர் பா. ஜ. க தேசிய செயலாளர் ஹெச். ராஜா விற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் நிலையில் இந்த இரு சம்பவங்களை கண்டித்தும் அதேபோல் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை நகர் பா. ஜ. க சார்பில் நகர தலைவர் உதயா தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் சிவகங்கை எஸ். பி அலுவலகத்திற்கு வந்ததுடன் கையில் ஐயப்பன் உருவப்படத்தை ஏந்தி ஐயப்பன் கோஷமிட்டு இருவர் மீதும் எஸ். பியிடம் புகார் மனு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி