சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே குன்றக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சண்முகநாதபுரம் பகுதியில் கடந்த 2014-15 பத்தாயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்கு குடிநீர் வழங்கும் பயன்பாட்டில் இருந்து வருகிறது இந்நிலையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இருக்கும் இடம் தனக்கு சொந்தமானது எனக்கூறி தனி நபர் ஒருவர் சுற்றி முள்வேலி அமைத்து பூட்டு போட்டு உள்ளனர் இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறை மற்றும் வட்டாட்சியர், பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்களுக்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் , சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.