நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அமரன் என்கிற திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. அதில் இஸ்லாமி யர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு இஸ்லாமியர்க ளுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதை கண்டித் தும், சிறுபான்மையினர் மக்களை தொடர்ந்து வஞ்சிக்கின்ற தமிழ் படங்களை கண்டித்தும் நேற்று சேலம் கோட்டை மைதானத்தில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் அப்துல் ரஷீத் தலைமை தாங்கினார். இதில் அமரன் படத்தை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்களை கைகளில் ஏந்தி நின்றனர். ஆர்ப்பாட் டத்தில் கட்சியின் துணை செயலாளர்கள் பூபதி, ஆசிம் மற் றும் நிர்வாகி நிஜாம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.