சேலம் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வீரபாண்டி ஆ. பிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -சேலம் மாவட்ட தி.மு.க. முன்னாள் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் 12-ம் ஆண்டு நினைவு தினம் நாளை (நவம்பர் 23) கடைபிடிக்கப்படுகிறது.
அன்று காலை 8 மணி அளவில் பூலாவரி கிளை அலுவலகத்தில் இருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டு வீரபாண்டி ஆறுமுகம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கட்சியின் நிர்வாகிகள், வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது பற்றுகொண்டவர்கள் திரளாக கலந்துகொண்டு அவரது புகழுக்கும், பெருமைக்கும் சிறப்பு சேர்த்திட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.