ஓய்வு பெற்ற ஜெயில் வார்டர் வீட்டில் 9 பவுன் நகை கொள்ளை

56பார்த்தது
ஓய்வு பெற்ற ஜெயில் வார்டர் வீட்டில் 9 பவுன் நகை கொள்ளை
சேலம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி எதிரில் ஆணைகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அம்பிகாபதி (வயது 65). ஓய்வு பெற்ற ஜெயில் வார்டர். இவர் கடந்த மாதம் நாமக்கல்லில் உள்ள தனது உறவினர் ஊரில் கோவில் விழாவுக்கு சென்று விட்டு நேற்று ஆணைக்கவுண்டம்பட்டியில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் பீரோவில் இருந்த தங்க சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட 9 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். அதன் மதிப்பு ரூ. 2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுதொடர்பான புகாரின் பேரில் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தை பார்வையிட்ட போலீசார் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டி இருப்பதாக தெரிவித்தனர். கடந்த ஒரு மாதத்தில் 2 போலீஸ் அதிகாரிகள் வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி