சேலம் மல்லமூப்பம்பட்டி கோட்டப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (26). இவரது வீட்டின் அருகேயுள்ள காட்டுப் பகுதிக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் காலைக்கடன் கழிக்க செல்வர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கருப்பு கோவிந்தன் உள்ளிட்ட நண்பர்கள், காட்டுப்பகுதிக்கு செல்வதற்கு பதிலாக ரோட்டோரம் அமர்ந்திருந்தனர். இதனை சுரேஷ் கண்டித்ததுடன், காட்டுப்பகுதிக்கு செல்லுங்கள் என கூறி அவர்களை எச்சரிக்கை செய்தார். இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் சுரேஷ் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த கருப்பு கோவிந்தன் மற்றும் நண்பர்கள் 3 பேர், சுரேசை வழிமறித்து, அன்று எங்களை ஏன் விரட்டினாய் இப்போது பேசு எனக்கூறி அவரை தாக்கினர். இதில் காயமடைந்த சுரேஷ், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின்பேரில் இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.