சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக உறுப்பினர் வெளிநடப்பு

69பார்த்தது
சேலம் மாநகராட்சி வரவு, செலவு சிறப்பு பட்ஜெட் கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் பட்ஜெட் தாக்கல் முன்னதாக இயல்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது மாநகராட்சி 43-வது வார்டு திமுக கவுன்சிலர் குணசேகரன் பேசுகையில் சேலம் மாநகரில் மட்டுமல்லாமல் எனது வார்டுகளிலும் அடிப்படை வசதியாக இருக்கக்கூடிய எந்த ஒரு பணியும் நடைபெறுவது கிடையாது ஒப்பந்ததாரர்கள் பணியை எடுத்தால் நல்ல முறையில் செய்ய வேண்டும் ஆனால் மாநகராட்சியில் எந்த பணியும் நடைபெறுவதில்லை. மாநகராட்சியில் 7 ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டு இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. மாநகராட்சியின் கட்டப்பட்ட கட்டிடங்கள் அனைத்தும் அப்படியே உள்ளன அதிகாரிகள் யாரும் சரிவர பணி செய்வது கிடையாது. இதுபோன்று இருக்கும்போது மக்களின் பிரச்சினைகளை எங்களால் சந்திக்க முடியவில்லை மாநகராட்சி மொத்தமாகவே தூங்கிக் கொண்டிருக்கிறது என கூறி மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்திய இந்த கூட்டத்தை விட்டு வெளியேறுகிறேன் எனக்கூறி பேசிக் கொண்டிருந்த மைக்கை தூக்கிப்போட்டு விட்டு மேயர் முன் சென்று அவருக்கு வணக்கம் தெரிவித்து வெளிநடப்பு செய்தார் திமுக மாமன்ற உறுப்பினர் இதுபோன்று மாநகராட்சி கூட்டத்தில் செய்தது திமுக உறுப்பினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி