22-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு கலெக்டர் தகவல்

599பார்த்தது
22-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு கலெக்டர் தகவல்
நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஆயத்த பணிகளை ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அனைத்து தொகுதிகளுக்கும் தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்கும் பணிகளை தொடங்கி விட்டது. இதன் ஒரு பகுதியாக இறுதி வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வெளியிட மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. வழக்கமாக ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக இந்த ஆண்டு் இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 22-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.

இது தொடர்பாக சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி 2024-ம் ஆண்டிற்கான புகைப்பட வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி அன்று வெளியிடப்பட்டு சிறப்பு சுருக்க முறை திருத்தத்திற்கான பணிகள் அன்று முதல் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. அதன்படி அன்று முதல் கடந்த மாதம் 9-ந் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகளுக்கான படிவங்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 22-ந் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி