சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் இருப்பாளி காட்டுவளவு பகுதியை சேர்ந்த பெரியண்ணன் மகன் லோகேஷ்வரன் (வயது 21), பட்டதாரியான இவர், மின்வாரிய தற்காலிக ஊழியராக தேவூர் பகுதியில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் (நவம்பர் 20) இரவு தனது தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு காய்கறிகள் வாங்க கடைக்கு சென்றுள்ளார்.
காய்கறிகள் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிய போது கால்நடை ஆஸ்பத்திரி அருகில் அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளும், லோகேஷ்வரன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் படுகாயம் அடைந்த லோகேஷ்வரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் லோகேஷ்வரன் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.