ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு கொடுக்க வேண்டிய நாப்கின்கள் கடைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாணவிகள், பெற்றோர்கள் நேரடியாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர். மேலும் அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மோசமாக திட்டுவதோடு அடிப்பதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.