துணைவேந்தரை பணி நீக்கம் செய்க - ராமதாஸ் வலியுறுத்தல்

80பார்த்தது
துணைவேந்தரை பணி நீக்கம் செய்க - ராமதாஸ் வலியுறுத்தல்
ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தரை பணிநீக்கம் செய்ய வேண்டும், இடைக்கால குழு அமைக்க வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்தான அவரது அறிக்கையில், இடைக்கால பிணையில் வந்துள்ள அதன் துணைவேந்தர் ஜெகநாதன் இதுவரை பணியிடை நீக்கம் செய்யப்படாதது அதிர்ச்சியளிக்கிறது. துணைவேந்தரும், பதிவாளரும் இல்லாத சூழலில் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க இடைக்கால நிர்வாகக் குழுவை அமைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி