வங்க கடலில் ரீமல் புயல் உருவானது

78பார்த்தது
வங்க கடலில் ரீமல் புயல் உருவானது
வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. 12 கிமீ வேகத்தில் நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறியது. வங்க கடலில் வடக்கு, அதையொட்டிய கிழக்கு மத்திய கடல் பகுதியில் புயல் நிலைகொண்டிருக்கிறது. நாளை நள்ளிரவு புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்க தேசத்தின் சாகர் தீவுக்கும் கெபுபாராவுக்கும் இடையே நாளை நள்ளிரவு புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிர புயலாக கரையை கடக்கும் போது மணிக்கு 135 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி