போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ரூ.5000 நிவாரணம் - இபிஎஸ்

51பார்த்தது
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ரூ.5000 நிவாரணம் - இபிஎஸ்
போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் இன்று தமிழக அரசு பேசத்துவார்த்தை நடத்த உள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொழிலாளர்களின் கோரிக்கையினை ஏற்று, இடைக்கால நிவாரணமாக ரூ. 5,000 வழங்க வேண்டும் என்றும், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வுபெற்றதொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிலுவையினை முழுமையாக வழங்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.