லஞ்சம் வாங்கிய போக்குவரத்து அலுவலக அலுவலர்கள் 3 பேர் கைது.!

85பார்த்தது
லஞ்சம் வாங்கிய போக்குவரத்து அலுவலக அலுவலர்கள் 3 பேர் கைது.!
ராமநாதபுரம் அருகே கீழக்கரை தட்டான் தோப்பு தெருவை சேர்ந்தவர் ரகு, 35. மனைவி சுதா பெயரில், 'டாடா பஞ்ச்' காரை வாங்கினார். இந்த புதிய காரை ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த ஜன. , 30ந்தேதி பதிவு செய்துள்ளார். ஆனால், இது நாள் வரை ஆர். சி. , புக் வழங்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இதுகுறித்து ஆர். டி. ஓ. , அலுவலக டெஸ்பாட்ச் கிளார்க் செய்யது, என்பவரிடம் பல முறை கேட்டும் கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. மேலும், 'ஆர். சி. , புக் வட்டார போக்குவரத்து அலுவலக புரோக்கர் நசீர், என்பவரிடம் உள்ளது. அதற்காக 2, 500 ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் உடனடியாக கொடுத்து விடுவார்' என்றாராம். அதுபோல, கார் நிறுவன மேலாளர் முருகேசன், 53, என்பவரிடம் கேட்ட போதும், 2, 000 ரூபாய் கொடுத்தால் ஆர். சி. , புக் கிடைக்கும் என கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத ரகு, இதனையடுத்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்துள்ளார். கார் நிறுவன மேலாளர் முருகேசனிடம், ரசாயனம் தடவிய ரூபாய் 2, 000 த்தை கார் நிறுவனத்தில் வைத்து ரகு கொடுத்த போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக அவரை பிடித்துள்ளனர். அவரது தகவலின் படி, ஆர். டி. ஓ. , அலுவலக டெஸ்பாட்ச் கிளர்க் செய்யது, புரோக்கர் நசீர் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you