கைத்தறி நெசவாளர் சங்கங்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

64பார்த்தது
கைத்தறி நெசவாளர் சங்கங்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு அனைத்து கைத்தறி நெசவாளர் சங்கங்களின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் தறிக்கூலியை காசோலை மூலம் மட்டுமே வழங்க வேண்டுமென்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் எனவும், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய ரிபேட் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், கைத்தறி நெசவாளர்களுக்கு மாத ஓய்வூதியம் 3000 உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கைத்தறி நெசவாளர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் நெசவாளர்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :