பரமக்குடியில் உள்ள எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரஹ்மோத்ஸவம், வைகாசி திருவிழா

1541பார்த்தது
பரமக்குடியில் உள்ள எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரஹ்மோத்ஸவம், வைகாசி திருவிழா
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வைகை ஆறு அக்கறையில் அமைந்துள்ள எமனேஸ்வரம் பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில் பிரஹ்மோத்ஸவம் மற்றும் வஸந்தோத்ஸவம் வைபவம்  நடைபெற்று வருகிறது. இவ்விழாவானது 04. 05. 2022 ஆம் தேதி இரவு காப்பு கட்டுதல், 05. 05. 2022 காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றிரவு அன்ன வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தது. தொடர்ந்து சுவாமி தினந்தோறும் காலையில் பட்டு பல்லாக்கிலும், இரவு நேரத்தில் பல வகையான அலங்காரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சுவாமி கருட வாகனத்தில் வீதி உலா வந்தது. 13. 05. 2022-ம் தேதி தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. 14. 05. 2022-ம் தேதி வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான வரதராஜ பெருமாள் கள்ளழகர் கோலத்தில் பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. 15. 05. 2022-ம் தேதி குதிரை வாகனத்தில் தல்லாகுளத்தில், அன்றிரவு காக்கா தோப்பு மண்டகப்படி நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து தசாவதார சேவையும் நடைபெறுகிறது. 20. 05. 2022-ம் தேதி வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சென்றடையும் நிகழ்வு நடைபெறும். 21. 05. 2022-ம் தேதி கண்ணாடி சேவை நடைபெறும்.

டேக்ஸ் :