பரமக்குடி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற அன்னாபிஷேகப் பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்:
10ஆயிரம் பேருக்கு அன்னதானம்.
உலகில் உள்ள சகல ஜீவராசிகளுக்கும் பசிப்பிணியைப் போக்கும் விதமாகவும், ஆண்டு முழுவதும் விவசாயத் தொழில் செழித்து உணவுப் பஞ்சம் இல்லாமல் இருந்திடவும், அதனை உணர்த்தும் விதமாக, ஒவ்வொரு வருடமும் , ஐப்பசி மாதத்தில் வருகின்ற பெளர்ணமி தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் மூலவருக்கு அன்னத்தைக் கொண்டு அபிஷேக அலங்காரம் நடைபெறும்.
ராமநாதபுரம் மாவட்டம்
பரமக்குடியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று , பச்சரிசி கொண்டு வடித்த சாதத்தால் மூலவருக்கு சாற்றுபடி செய்யப்பட்டு , காய்கறிகள் மற்றும் வண்ண வண்ண மலர்களால் அலங்காரம் செய்து, மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இந்த அன்னாபிஷேக விழாவில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் சுவாமியை அன்னாபிஷேக அலங்காரத்தில் தரிசனம செய்தனர்.
பின்னர் மூலவருக்கு தேன், பால் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதன் பின்பு பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அன்னதானம் அருந்தி சென்றனர்.