பாரம்பரிய கலாச்சார முறையில் மழையில் நனைந்தவாறு களிகம்பு
நடனமாடி
இஸ்லாமிய இளைஞர்கள் உற்சாகம்:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே
கீழராமநதி கிராமத்தில்
மஹான் ஜிந்தா மதார் வலியுல்லாஹ் தர்ஹாவின் வருடாந்திர சந்தனக்கூடு விழா நடைபெற்றது.
முன்னதாக ஜிந்தா மதார் வலியுல்லாஹ் பள்ளிவாசலில் இருந்து துவா செய்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடை சபரிமலைக்கு மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்ட இந்து பக்தர்கள்
இரவு முழுதும் கிராமத்தின் முக்கிய வீதிகளில் வழியாக தூக்கி வலம் சென்ற சந்தனக்கூடு தர்ஹாவுக்கு மீண்டும் வந்து அடைந்தது
.
வழிநெடுகிலும் இஸ்லாமிய பெண்கள் தாம்பூல தட்டில் சர்க்கரை, ஊதுபத்தி , பூஜை பொருட்களுடன் சந்தனக்கூடை வரவேற்ற பக்தர்களுக்கு சர்க்கரை பிரசாதமாக வழங்கப்பட்டது.
இந்த சந்தனக்கூடு விழாவில் மதுரை, சென்னை, ராமநாதபுரம், கீழக்கரை , ஏர்வாடி தர்கா, உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.