கமுதி அருகே மலட்டாறு படுகையில் மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டரை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளரை போலிசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பறையங்குளம் அருகே மலட்டாற்றில் சட்ட விரோதமாக டிராக்டர் மூலம் மணல் திருட்டு நடைபெறுவதாக கோவிலாங்குளம் போலீசாருக்கு கிடைத்ததகவலின் பேரில் அப்பகுதியில் போலீஸôர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பறையங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் முருகன்(30) மணல் திருட்டில் ஈடுபட்டது தெரிவந்துள்ளது. இதனையடுத்து போலீஸôரை கண்டதும் முருகன் அங்கிருந்து தப்பியோடினார்.
இதனை தொடர்ந்து டிராக்டர் கோவிலாங்குளம் காவல் நிலையம் கொண்டு வரப்பட்டு, முருகன் மீது வழக்கு பதிந்து போலீசார் தேடிவருகின்றனர்.