விவசாயிகள் சாலை மறியல்

59பார்த்தது
பயிர் இன்சூரன்ஸ் பதிவதற்கு அடங்கல் சான்று வழங்காததால் விவசாயிகள் சாலை மறியல்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகாவில் உள்ள புனவாசல், ஆப்பனூர், சிறுகுடி, மாரந்தை, ஒரிவயல், பனைக்குளம், இளஞ்செம்பூர், பூக்குளம், பாடுவனேந்தல் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நடப்பாண்டு நெல் நடவு செய்துள்ள நிலையில் பயிர்களுக்கான பயிர் இன்சூரன்ஸ் இன்று 15. 11. 24 க்குள் பதிய. வேண்டிய நிலையில்

பயிர் இன்சூரன்ஸ் பதிய கிராம நிர்வாக அலுவலர் அடங்கல் சான்று கொடுத்தால் மட்டுமே பதிய முடியும் என்ற நிலை இருப்பதால் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் அடங்கல் சான்று கொடுக்காமல் காலம் தாழ்த்துவதாக தெரிய வந்ததை அடுத்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடலாடி தாலுகா அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக அங்கு வந்த வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக அடங்கல் சான்று வழங்க ஏற்பாடு செய்வதாக கூறியதை அடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி