இன்று (அக்.15) மாலை முதல் மழை மேலும் அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்த தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 நாட்களுக்கு கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும்” என்று தெரிவித்துள்ளார்.