தமிழ்நாட்டுக்கான ரயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரி மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியது தொடர்பாக அவருக்கு ரயில்வே அமைச்சர் பதிலளித்துள்ளார். தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்காக தேசிய ஜனநாயக கூட்டணி ரூ. 6,362 கொடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத் தொகை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒதுக்கியதை விட 7 மடங்கு அதிகமாகும் என தெரிவித்துள்ளார்.