நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார் ராகுல் காந்தி!

61பார்த்தது
நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார் ராகுல் காந்தி!
கேரளா வயநாட்டில் ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், வயநாடு தொகுதியில் நாளை மதியம் 12 மணிக்கு ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். அப்போது அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் உடன் இருப்பார். இந்த தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜா போட்டியிடுகிறார். இதே வயநாடு தொகுதியில், கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராகுல் காந்தி 4.31லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி