தமிழகத்தில் ராகுல் காந்தி விரைவில் சூறாவளி பிரச்சாரம்

82பார்த்தது
தமிழகத்தில் ராகுல் காந்தி விரைவில் சூறாவளி பிரச்சாரம்
சென்னை விமான நிலையம் வந்த செய்தியாளர்களிடம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் கடந்த மக்களவைத் தேர்தலை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக, காங்கிரஸ் இடம்பெற்றுள்ள இண்டியா கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் விரைவில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மும்பையில் இன்று அவர்களை சந்தித்து பயண திட்டங்களை வகுக்க இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி