விராலிமலை ஒன்றியம் ஆவூர் ஊர்புற நூலகத்தில் நூலக வார விழாவை ஒட்டி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆவூர் சர்ச் பங்கு குரு சூசை ராஜ் தலைமை வகித்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். வாசகர் வட்ட உறுப்பினர்கள் விக்டோரியா, ஜூலியட் மேரி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். தன்னார்வலர்கள் அருள் மேரி, நேசமணி, ஜெயமேரி மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நாகலட்சுமி வரவேற்றார் இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர் சகாயமேரி நன்றி கூறினார்.