அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலி!

67பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அடுத்த குடுமியான்மலை சேரனூரை சேர்ந்தவர் சிலம்பரசன் (35). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் சேரனூர் பிரிவு ரோடு என்னும் இடத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் கொண்டு செல்லும் வழியிலேயே பலியானார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :