ராயவரம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் திருவிழா

1059பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராயவரம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடந்த 6ம் தேதி காப்பு கட்டுதலுடன் வைகாசி பெருந்திருவிழா தொடங்கியது. கடந்த ஒரு வாரமாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்நிலையில் வைகாசி திருவிழாவின் ஒரு பகுதியான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. மா, பலா, வாழை உள்ளிட்ட முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீற்றிருக்க தேரை புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் தேரானது நான்கு வீதிகளையும் சுற்றி வந்த பிறகு நிலை நின்றது. பின்னர் முத்துமாரியம்மன் கோயிலில் குழந்தை வரம் கேட்டு வேண்டிக் கொண்டவர்கள் குழந்தை வரம் பெற்ற பிறகு தேரின் அடியில் குழந்தையைப் போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிகழ்வில் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். அரிமளம் போலீசார் பாதுகாப்பு பணிகளை செய்து இருந்தனர்.

தொடர்புடைய செய்தி