

ஆலங்குடி அருகே திருவிளக்கு பூஜை
ஆலங்குடி அருகே உள்ள பாத்தம்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ ராஜகணபதி ஆலயத்தின் 5-ஆம் ஆண்டு வருடாபிஷேகம் விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் சுமங்கலி பெண்கள் பங்கேற்று உலக நன்மைக்காகவும், நாடு நலம்பெறவும், விவசாயம் செழித்திடவும், நோயின்றி மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்திடவும் வேண்டி திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை சிறப்பித்தனர்