புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கோவிலூரை சேர்ந்தவர் பத்மநாதன். இவர் கோவையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு வந்த இடத்தில் வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.