இந்த மூவருக்கு மட்டும் உலகை சுற்ற பாஸ்போர்ட் தேவையில்லை

58பார்த்தது
இந்த மூவருக்கு மட்டும் உலகை சுற்ற பாஸ்போர்ட் தேவையில்லை
சர்வதேச அளவில் விமான பயணம் மேற்கொள்ளும் போது பாஸ்போர்ட் என்பது அவசியமாகிறது. ஆனால் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ், ஜப்பான் பேரரசர் நருஹித்தோ மற்றும் அவர் மனைவி மசாகோ ஆகிய மூவரும் பாஸ்போர்ட் இல்லாமலேயே உலகில் எங்கும் செல்ல முடியும். இங்கிலாந்து பாஸ்போர்ட்டுகள் மன்னரால் வழங்கப்படுவதால், அவரிடம் அது இருக்க வேண்டிய அவசியமில்லை. ஜப்பானைப் பொறுத்தவரை, பேரரசரும் பேரரசியும் அமைச்சக ஆவணத்தை மட்டும் தங்களிடம் வைத்திருந்தால் போதுமானது.