இந்தியர்களை சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு அனுப்பிய ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்களை கை, கால்களில் விலங்குகள் பூட்டி அனுப்பியற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அமைச்சர் விளக்கமளித்தார். அதில், நாடு கடத்தும்போது கைவிலங்கு போடும் நடைமுறை 2012-லிருந்தே பின்பற்றப்படுகிறது. சட்டப்படியே அவர்களுக்கு கை, கால்களில் விலங்கு போடப்பட்டது என்றார்.