கல்லூரி விடுதியில் நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை

76833பார்த்தது
கல்லூரி விடுதியில் நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை
திருச்சி இருங்களூரில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் நாமக்கல் கொல்லிமலையை சேர்ந்த முருகேசனின் மகள் சத்தியப்ரீத்தி (20) இறுதியாண்டு படித்து வந்துள்ளார். நேற்று மாணவி சத்தியப்ரீத்தி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் போலீசாருக்கும், பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த லால்குடி போலீசார் மாணவியின் உடலை உடற்கூறாய்வுக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரியில் பணம் கட்ட சொல்லி நெருக்கடி கொடுப்பதாகவும், தகாத வார்த்தைகளால் இழிவு படுத்துவதாகவும் சக மாணவிகள் இறந்த மாணவியின் பெற்றோரிடம் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.