3 மாநிலங்களில் போட்டியிடப் போவதில்லை - பாஜக முடிவு

65பார்த்தது
3 மாநிலங்களில் போட்டியிடப் போவதில்லை - பாஜக முடிவு
மக்களவைத் தேர்தலில் வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பாஜக போட்டியிட போவதில்லை என முடிவு செய்துள்ளது. அந்தந்த மாநிலங்களில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு மட்டும் அளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மூன்று மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக மக்களிடையே எதிர்ப்பு மனநிலை காணப்படுவதாலும், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.