தவறான செய்திக் கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை யூ-டியூப் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, தவறான தகவல் கொண்ட தலைப்புகள், புகைப்படங்கள் கொண்ட வீடியோக்கள் உடனடியாக நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இதுபோன்ற வீடியோக்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் போது, அதனை மாற்றிக் கொள்ளவும் வாய்ப்புகள் வழங்கப்படுமெனவும் யூ-டியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.