

வேதாரண்யம்: கும்பாபிஷேகத்தில் நீர் மோர் வழங்கிய முஸ்லிம்கள்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிக்கரை அருள்மிகு வீரனார் ஆலய கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. வெள்ளிக்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கி இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்று புனித நீர் கலசங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து வந்து விமான கலசத்திற்கும் மூலவர்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை ஒட்டி கோடியக்கரை, கோடியக்காடு இஸ்லாமியர்கள் பந்தல் அமைத்து கும்பாபிஷேகத்தை காண வந்த பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கினர். கோயில் கும்பாபிஷேகத்தை காண வந்த பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் மத நல்லிணக்கத்துடன் நீர் மோர் வழங்கியது அனைவரின் பாராட்டுக்குரியதாக இருந்தது. இந்த நிகழ்வில் ஆலய நிர்வாகி பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.